வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2025 10:01
மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர்,சந்தனம்,இளநீர்,தயிர்,நெய் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் வேம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.