Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாராகி அம்மனுக்கு பஞ்சமி மகா ... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருப்பாவை பாராயணம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஜன., 12ல் சந்தனம்படி களையப்பட்டு தரிசனம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஜன., 12ல் சந்தனம்படி களையப்பட்டு தரிசனம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
04:01

உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை ஸ்தல விருச்சமாக அமைந்துள்ளது. 


புராண, இதிகாசத்துடன் தொடர்புடைய உத்தரகோசமங்கையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. உத்தரகோசமங்கையில் சந்தனம் படி களைதல் மற்றும் புதிய சந்தனம் சாப்பிடப்படும் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் உத்தரகோசமங்கைக்கு வருகின்றனர். இன்று மாலை 6:00 மணிக்கு கோயில் முன்புறமுள்ள மங்கள விநாயகர் கோயிலில் இருந்து அனுக்ஞை பூஜையுடன் விழா துவங்கியது. உத்தரகோசமங்கை வடக்கு பகுதியில் உள்ள தனி சன்னதியில் அமைந்துள்ள பச்சை மரகத நடராஜர் சிலை உலகப் புகழ்பெற்றதாகும். வருகிற ஜன., 12 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தன காப்புகள் களையும் நிகழ்ச்சி நடக்கிறது. மூலவர் மரகத நடராஜரின் திருமேனியில் 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடக்கிறது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்படுகிறது. இரவு 11:30 மணிக்கு மேல் திரையிடப்பட்டு புதிய சந்தன காப்பு மற்றும் அலங்கார மலர் மாலைகள் சூடப்படுகிறது. மறுநாள் ஜன., 13 அதிகாலை 2:00 மணிக்கு பிறகு அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாசக பெருமானுக்கு, காட்சி கொடுத்து சோடச உபசார அலங்கார தீபாராதனையும் நடக்க உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை சந்தனம் படி களையப்பட்ட மூலவர் மரகத நடராஜரின் திருமேனியை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள், சிறப்பு பஸ் வசதி உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகமும் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழா துவங்கியது. ஜன.26ல் வெள்ளி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில்  108 வைணவத்தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar