திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருப்பாவை பாராயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2025 04:01
சென்னை; அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் கந்தசஷ்டி, வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின்போது, தமிழக இசை, கவின்கலை பல்கலை மற்றும் அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவியரின் பங்கேற்புடன் கந்தசஷ்டி பாராயணம் மற்றும் திருப்பாவை பாராயணம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தற்போது, வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தமிழக இசை, கவின்கலை பல்கலைக்கழகம் மற்றும் அரசு இசைக் கல்லூரி மாணவ மாணவியரின் திருப்பாவை பாராயணம் செய்தனர். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.