அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண கால பிரம்மோற்சவம் துவக்கம்; 14ம் தேதி தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2025 10:01
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் கொடியேற்றம் நடந்தது. சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான மார்கழி மாதத்தில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து தங்க கொடிமரம் முன் விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் எழுந்தருளினர். அப்போது சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, 63 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. விழா தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும். தினமும் காலை, இரவு மாடவீதி உலா வந்து சுவாமி அருள்பாலிப்பார். 14ம் தேதி தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.