பதிவு செய்த நாள்
06
ஜன
2025
10:01
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் 108 வைணவத்தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், பிரமோற்சவம் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது தலமாக போற்றப்படும், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவம் திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க கருடாழ்வார் திருவுருவ வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார் திருவிழா நாட்களில், தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது, விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 10ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு தரிசனம் வருகிற14ம் தேதி செவ்வாய்க்கிழமை தைப்பொங்கல் திருநாளான திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் சிவசங்கரி, உதவி ஆணையர் சாந்தா, மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.