Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் ... சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்; 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2025
10:01

திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.


குறிப்பாக வார விடுமுறை ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வர். அந்த வகையில் நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக, காலை 6:00 மணி முதலே அதிகளவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். குறிப்பாக, ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் முருகன் மலைக்கோவிலுக்கு வந்ததால், தேர்வீதியில் எங்கு பார்த்தாலும், செவ்வாடை பக்தர்கள் அதிகளவில் இருந்தனர். இதனால் பொது தரிசனத்தில் பக்தர்கள், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு தங்கத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்படுவதால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கோவில் பேருந்து தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தன. இதனால், பெரும்பாலான பக்தர்கள் மலைப்பாதையில் நடந்து சென்றும், சில பக்தர்கள் ஆட்டோக்கள் வாயிலாகவும் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar