பதிவு செய்த நாள்
07
ஜன
2025
10:01
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையோட்டி கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. 6 மணி நேரத்திற்கு பிறகு பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 தேதி முதல் 19 ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொற்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கோயிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனால் 6 மணி நேரத்துக்கு பிறகு பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு வருடப்பிறப்பு ( உகாதி ) , ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னதாக வரும் செவ்வாய்கிழமையில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று காலை மார்கழி மாத திருபாவை, தோமாலை, அர்ச்சனை சேவை நடைபெற்ற பிறகு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மீது பட்டு வஸ்திரம் கொண்டு மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி, வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்றது. பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூரனம், மஞ்சள், கிச்சலிகிழங்கு உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோயில் முழுவதும் பூசப்பட்டது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 6 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிருத்தப்பட்டது. தொடர்ந்து, 12 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு, இ ஓ ஷியாமலா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வெங்கைய சவுத்ரி, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீதர், துணை செயல் அதிகாரி லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஊழியர்கள் பங்கேற்றனர்.