பதிவு செய்த நாள்
08
ஜன
2025
11:01
மயிலாடுதுறை; சீர்காழி அருகே புதன் ஸ்தலமான சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜெர்மனி, சுவிச்சர்லாந்து, தைவான் உள்ளிட்ட வெளிநாட்டு பக்தர்கள் மனமுருகி சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமான அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜெர்மனி,சுவிச்சர்லாந்து, நாட்டைச் சேர்ந்த 30 பேர் ஓம் நமச்சிவாய,,ஓம் நமச்சிவாய என தமிழில் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தனர், உலக அமைதி வேண்டியும், மக்கள் நிம்மதியாக வாழ்வதற்காகவும் ஜெர்மனி,சுவிச்சர்லாந்து, தைவான் உள்ளிட்ட நாட்டை சேர்ந்தவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கோவில் கோவிலாக சென்று வழிபட்டு வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலமான அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டனர்.
அப்போது கோயிலுக்கு வந்த உள்ளூர் பக்தர்கள் வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என தமிழ் மொழியில் உச்சரித்து பக்தி பரவசத்தோடு வழிபாடு செய்வதை வியந்து பார்த்தனர்.