அவிநாசி; துலுக்க முத்தூர் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அவிநாசி வட்டம், துலுக்க முத்தூர் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மை அழைத்தல், படைக்கலம் கொண்டு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கும்பம் கிணற்றில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.