Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலுக்க முத்தூர் மாகாளியம்மன் ... சுந்தரராம வாஜபேயயாஜீக்கு காஞ்சி விஜயேந்திரர் தங்க கங்கணம் அணிவித்து ஆசி சுந்தரராம வாஜபேயயாஜீக்கு காஞ்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் வைகுண்ட ஏகாதசி வைபவம்; நாளை பரமபத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
திருப்பூரில் வைகுண்ட ஏகாதசி வைபவம்; நாளை பரமபத வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

09 ஜன
2025
02:01

திருப்பூர்; வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாகிய, பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி, நாளை அதிகாலை நடைபெற உள்ளது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை, பரமபதவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.


பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளாகிய இன்று, நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலத்துடன் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாளுக்கு, மகா திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து, பாண்டின் கொண்டை அலங்காரத்துடன், கருடவாகனத்தில் எழுந்தருளி, 5:30 மணிக்கு, பரமபத வாசல் வழியாக பிரவேசித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுவாமி தரிசனம் முடிந்து, சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தை, கவுன்சிலர் கண்ணப்பன் ஏற்பாட்டில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று சுத்தம் செய்தனர். 


கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை சுவாமிக்கு அபிேஷகமும், நாளை அதிகாலை 5:00 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது; நாளை மாலை, நம்பெருமாள் திருவீதியுலா நிழ்ச்சியும், ஸ்ரீசண்முகாலயா நாட்டியபள்ளி மாணவியரின், ‘‘வைகுந்தம் தரும் வரதராஜன்’ என்ற தலைப்பில் பரதநாட்டியம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. வரும், 11 ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, கூடாரை வெல்லும் உற்சவமும், கூடாரவல்லி நுாறு தடா அக்காரவடிசல் படைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. l அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், பெருமாநல்லுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், நாளை அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் பதினோராம் நாளில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் தேரில் பவனி வருகின்றனர்.‘ஊர் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar