Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராம வாஜபேயயாஜீக்கு காஞ்சி ... திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா திரளான பக்தர்கள் தரிசனம் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி; நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி; நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

09 ஜன
2025
03:01

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நாளை வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி வைபவ விழா, விமர்சியாக நடைபெறும். வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக, திருமொழித் திருநாள் எனும், பகல் பத்து உற்சவம், டிச., மாதம், 31ம் தேதி துவங்கியது. கடந்த பத்து நாட்களாக கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர், அரங்கநாதர் சுவாமி முன், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில், குலசேகர பெருமாள் அருளிச் செய்த, பெருமாள் திருமொழி, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த திரு நெடுந்தாண்டகம் மற்றும் பெரிய திருமொழி பாசுரங்கள் ஆகியவற்றை சேவித்தனர். நேற்று இரவு, அரங்கநாத பெருமாள், நாச்சியார் திருக்கோலத்தில் மோகனா அவதாரத்தில் எழுந்தருளினார்.


நாளை அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. தேர் செல்லும் நான்கு வீதிகளில், 34 சமூகத்தின் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், சொர்க்கவாசல் வழியாக வெளியே வருவார். ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் அமைத்துள்ள பந்தல்களில், சுவாமியை வைத்து சிறப்பு பூஜை செய்வர். பூஜை முடிவில் அந்தந்த பந்தல் சமூகத்தினருக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரங்கநாத பெருமாளை வழிபடுவர்.


நாளை இரவு, 11:00 மணிக்கு ராப்பத்து உற்சவமான, திருவாய் மொழித் திருநாள் தொடங்க உள்ளது. 17ம் தேதி இரவு திருமங்கை மன்னன் வேடுபரியும், அரங்கநாத பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, உலா வரும் உற்சவமும் நடைபெற உள்ளது. 19ம் தேதி இரவு திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar