ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காக விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2025 04:01
மானாமதுரை; கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோயில் மானாமதுரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வருடம் தோறும் 200க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 5ம் தேதி மானாமதுரையிலிருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்ற நிலையில் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் உலக நன்மைக்காகவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், நோயில்லாமல் மக்கள் வாழ வேண்டியும் கன்னி சாமிகளை வைத்து விளக்கு பூஜை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை மானாமதுரை பஞ்சமுக ஆஞ்சநேயர் ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.