Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரஜோதி பாதுகாப்பு ஏற்பாடுகள்: ... ஜன.14 முதல் ஜன.18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம் ஜன.14 முதல் ஜன.18 வரை திருவாபரணம் அணிந்த ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஜோதி தரிசனத்திற்கு கட்டுப்பாடு; சபரிமலை, பெருவழி பாதையில் நான்கு நாட்கள் அனுமதி ரத்து
எழுத்தின் அளவு:
ஜோதி தரிசனத்திற்கு கட்டுப்பாடு; சபரிமலை, பெருவழி பாதையில் நான்கு நாட்கள் அனுமதி ரத்து

பதிவு செய்த நாள்

09 ஜன
2025
05:01

சபரிமலை; 11ம் தேதி முதல்  14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், 12 முதல் 15 -ம் தேதிமதியம் வரை பம்பை ஹில்டாப்பில் பார்க்கிங் அனுமதி இல்லை என்றும் சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரியும், சப் கலெக்டருமான அருண் நாயர் கூறினார்.


சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மகரஜோதி நாளில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 12. 13, தேதிகளில் ஐந்தாயிரமாகவும், 14ஆம் தேதி ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு 12-ம் தேதி 60 ஆயிரம், 13-ம் தேதி 50 ஆயிரம் 14-ம் தேதி 40 ஆயிரம் என குறைக்கப்பட்டுள்ளது. 12- ம் தேதி காலை 8:00 மணி முதல் 15ஆம் தேதி மதியம் 2:00 மணி வரை பம்பை ஹில்டாப்பில் சிறிய வாகனங்கள் பார்க்கிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.பம்பை சாலக்கயத்தில் சிறிய வாகனங்கள் நிரம்பும் பட்சத்தில் அனைத்து வாகனங்களும் நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்பப்படும். பம்பையில் நெரிசலை தவிர்க்க இங்கு செயல்பட்டு வந்த ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டுள்ளது. இனி அனைத்து வாகனங்களும் நிலக்கல் மைதானத்திற்கு சென்று திரும்பும். ஸ்பாட் புக்கிங் தேவைப்படுபவர்கள் நிலக்கல்லில் இறங்கி பதிவு செய்து வர வேண்டும்.


11ம் தேதி முதல் 14 -ம் தேதி வரை பெருவழி பாதையில் பக்தர்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் பம்பை வந்து சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பக்தர்கள் மட்டும் 11.ம் தேதி பெருவழி பாதையில் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜோதி தரிசனத்துக்காக காடுகளில் குடில் கட்டி தங்கி உள்ள பக்தர்கள் சமையல் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பம்பையில் இருந்து கேஸ் சிலிண்டர்களுடன் பக்தர்கள் வந்தால் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும் போது வழங்கப்படும். கடந்த ஆண்டு திருவாபரணம் வந்தபோது வலியான வட்டத்தில் பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு இங்கு கூடுதல் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் பணியமர்த்தப்படுவார்கள். பெருவழிப் பாதையில் வரும் ஏராளமான பக்தர்கள் பெரியான வட்டம் வந்ததும் உட்காடு வழியாக நீலிமலை வந்து சன்னிதானம் வருகின்றனர். காடுகளில் அனுமதி இன்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் உச்சபூஜைக்கு முன்னோடியாக களப பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலைக்கு புல்மேடு வழியாக செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் ரோப்வே அமைப்பதற்காக வெட்ட வேண்டிய மரங்களின் எண்ணிக்கை டிரோன் மூலம் ... மேலும்
 
temple news
சபரிமலை; பக்தர்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் சபரிமலை வரும் பாதைகளில் ஆக்சிஜன் பார்லர்களுடன் ... மேலும்
 
temple news
சபரிமலை; சத்திரம் - புல்மேடு பாதையில் வரும் சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar