பதிவு செய்த நாள்
10
ஜன
2025
08:01
செங்கல்பட்டு; வைகுண்ட ஏகாதசியையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவர்கால குடைவரைக் கோவிலான அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். ஆனால் அவை எல்லாவற்றையும் விட, மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசி நாளன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் எழுந்தருளி, அருள்பாலிக்கும் நிகழ்வு நடைபெறும். அந்தவகையில் வெள்ளிக்கிழமை யான இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு, மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், ஊரப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாள் சாமியை தரிசனம் செய்தனர்.