பெரியகுளம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அரவணை பாயாசம் தயாரிப்பதற்கு தேனி அருகே லட்சுமிபுரத்திலிருந்து, தினமும் வெல்லமூடைகள் அனுப்பப்படுகின்றன. பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில், 10க்கும் அதிகமான வெல்ல ஏல மண்டிகள் உள்ளன. தென்மாவட்டங்களில் வெல்ல விலையை நிர்ணயம் செய்வதில், லட்சுமிபுரம் வெல்ல மார்க்கெட் முன்னிலையில் உள்ளது. கேராளவில் ஓணம் பண்டிகை காலங்களில் தினமும் லாரிகளில் வெல்ல மூடை லோடுகள் அனுப்பப்பட்டன. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதமான அரவணைபாயாசம் தயாரிப்பதற்கு தினமும் 300 முதல் 500 வெல்லமூடைகள் லாரியில் அனுப்பப்படுகின்றன. வெல்ல ஏல மண்டியில் ஏலம் எடுக்கும் வெல்ல வியபாரிகள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கின்றனர். நயம் கலர் வெல்லம் (42கிலோ) ஒரு மூடை 1800 ரூபாயாகவும், பச்சைவெட்டு 1700, செங்கால் 1600, கருப்பு 1200க்கு விற்பனை செய்யப்படுகிறது.