பதிவு செய்த நாள்
01
டிச
2012
11:12
திருவாவடுதுறை ஆதீனத்தில் பரிபூரணமடைந்த 23வது குருமகாசன்னிதா னத்திற்கு குருபூஜை விழா மற்றும் 24வது குருமகாசன்னிதானம் ஞான பீடா ரோகணம் அமரும் வைபவம் மரபுப்படி நேற்று நடந்தது. திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் அருள்திரு நமசிவாய மூ ர்த்திகளால் கி.பி. 14ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது திருவாவடுது றை ஆதீனம். சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதற்கென பணிகளை செ ய்து வரும் இவ்வாதீனத்தின் 23வது குருமகாசன்னிதானமாக அருளாட்சி புரி ந்த சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 22ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சதய நட்சத்திரத்தில் பரிபூரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஆதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள் ஒன்றுகூடி மூத்தவரும், மூவகை தீட்சைகளும் பெற்று விளங்கிய சீர்மன்னு மீனாட்சி சுந் தரம் தம்பிரான் சுவாமிகளை 24 வது குருமகாசன்னிதானமாக மரபுப்படி எழு ந்தருளச் செய்தனர். இவருக்கு அம்பலவாண பண்டார சந்நிதி என்னும் தீட்சா நாமம் சூட்டப்பட்டது. இதனை தொடர்ந்து 10ம் நாளான நேற்று (30ம் தேதி) வெள்ளிக்கிழமை கா லை ஆதீனத்தில் ஞானமா நடராஜ பெருமான் மற்றும் குருமுதல்வர் நமசிவா ய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மறைஞான தேசிகர் தபோவனத்தில் உள்ள 23வது குருமகாசன் னிதானம் குருமுர்த்தத்தில் குருபூஜை விழா மரபுப்படி நடந்தது. 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆ ராதனைகள் செய்து வழிபட்டார்.
பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடன் அழைத்துவரப்பட்ட 24வது குருமகா சன்னிதானம் மடத்தின் வடக்கு வாயிலில் உள்ள சிவப்பிரகாச விநாயகரை வ ழிபட்டும், கோபூஜை செய்தும், குருமுதல்வர் நமசிவாய மூர்த்திகள் சன்னிதி யில் வழிபாடும் நடத்தினார். மதியம் சரியாக 1.15 மணிக்கு ஆதீன ஒடுக்கத்தில் உள்ள குருமகாசன்னிதா னம் இருக்கையில் அமரும் ஞானபீடாரோகணம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 24வது குருமகாசன்னிதானமாக பதவியேற்றதற்கான கோப்பில் முறைப்படி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டாரசந்நிதி என கையெழுத்திட்டார். இந்நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் 292வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அ ருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோ யில் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமா ச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் குருமகாசன்னிதானம், திருப்பனந்தா ள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், அம் மன்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரம தலைவர் ஸ்ரீமத் சுவா மி கிருஷ்ணானந்தா, தருமை ஆதீனம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் இளைய குருமகாசன்னிதானம், சிதம்பரம் மவுனசாமி மடம், துலாவூர் ஆதீனம், வடலூர் ஊரன் அடிகள், கோவை ஆனை மலை ஆர்ஷவித்யா குருகுலம் பிரசானந்தா சுவாமிகள், குன்றக்குடி ஆதீனம் பிரதிநிதி, தஞ்சை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டு 24வது குருமகாசன்னிதானத்திற்கு பொன்னாடை அணிவித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 24வது குரு மகாசன்னிதானம் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்வித்தார். ஆதீன கோயில்கள், சிதம்பர நடராஜர் கோயில் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கோ யில்களின் பிரசாதத்தை சிவாச்சாரியார்கள் வழங்கினர். ஆதீன தம்பிரான் சுவாமிகள், அறநிலையத்துறை அதிகாரிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள், ஆதீன புலவர்கள், சித்தாந்த பேராசிரியர்கள், ஓதுவார்கள் உட்பட திரளாக பக்தர்கள் குருமகாசன்னிதானத்திடம் ஆசி பெற்றனர். மாலை 5 மணிக்கு திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், 6 மணிக்கு கோமுத்தீ ஸ்வரர் கோயில் வழிபாடும், பின்னர் 7 மணிக்கு ஞானமா நடராஜ பெருமான் மற்றும் நமசிவாய மூர்த்திகள் பூஜையும், இரவு 8 மணிக்கு 24வது குருமகாசன்னிதானம் சிவிகைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மரபுப்படி பட்டணப் பிரவேசமும், ஞானகொலுக்காட்சியும் நடந்தது.