திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் 1,008 பால்குட விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2025 02:01
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பொங்கலையொட்டி பால்குட விழா, கந்தன் வழிபாட்டு மன்றத்தினர் வாயிலாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு, 34ம் ஆண்டு, பால்குட விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில், சரவண பொய்கையை ஒட்டிய காவடி மண்டபத்திலிருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடங்களை ஏந்தி, மாடவீதியில் கிரிவலம் வந்தனர். பால் குடங்களுடன் காவடி அணிவகுப்பும் நடந்தது. பிற்பகல் 12:30 மணிக்கு பக்தர்கள் கந்தசுவாமி கோவிலில் வந்தடைந்தனர். உற்சவர் மண்டபத்தில் பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமிக்கு பால் குடங்களால் பாலாபிஷேகம் நடந்தது.