கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 5 மணி முதல் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து ராமநாதீஸ்வரர் சுவாமிக்கு தீபாரதனை நடந்தது. பின்னர் நந்தி தேவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து ஞானாம்பிகை சமேத சந்திரசேகர் சுவாமிகள் சூரிய பகவானுக்கு காட்சி தரும் நிகழ்ச்சியும், சுவாமிகள் வீதியுலாவும் நடந்தது. திருத்தல இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய மும் நடைபெற்றது.தொடர்ந்து நந்தி தேவருக்கு அணிவிக்கப்பட்ட பொருட்களை பக்தர்கள் ஏலம் எடுத்துச் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.