கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, முத்துகவுண்டனுார் ஊத்துமலை முருகன் கோவிலுக்கு, பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, ஆண்டுதோறும் பக்தர்கள் பலர் பொங்கல் பண்டிகையையொட்டி, சொக்கனுார் ஊராட்சியில் உள்ள முத்துகவுண்டனுார் முத்துமலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும், 14 வது ஆண்டாக கிணத்துக்கடவு கனககிரி வேலாயுத சுவாமி கோவிலில் இருந்து, முத்துமலை முருகன் கோவிலுக்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். இதில், பக்தர்கள் பலர் பால்குடம் காவடி மற்றும் சேவல் கொடியுடன் பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து முத்து மலை முருகன் கோவிலில், பக்தர்கள் மேளதாளத்துடன் காவடி ஆட்டம் ஆடினர். கோவிலில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.