திருப்போரூர் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பரிவேட்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2025 03:01
திருப்போரூர்; திருப்போரூர் கொளத்துார் பகுதியில் கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் பழமை வாய்ந்த திருவிடந்தை நித்தய கல்யாண பெருமாள் கோவிலின் பரிவேட்டை தலமாக உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராஜகோபுரம், கொடிமரம் ஏற்படுத்தப்பட்டன. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி சிறப்பு வழிபாடாக தனுார் மாத பூஜையும், ஆண்டாள் வழிபாடும் விமர்சையாக நடைபெறுகிறது. இந்தாண்டு தனுார் மாத பூஜை டிச.,16 ம்தேதி துவங்கி நடந்து வந்தது. தொடர்ந்து பொங்கல் வருகையை ஒட்டி ஆண்டாள் சிறப்பு உற்சவம் பொங்கல் அன்று துவங்கியது. அன்றையதினம் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மலர் அர்ச்சனையும் நடந்தது. நேற்று மாட்டுபொங்கலை ஒட்டி அங்குள்ள ரங்கநாதர் குளத்தில் வழிபாடு நடந்தது. இன்று ரங்கநாதர், ரங்கநாயகி தாயாரும், பல்லக்கில் எழுந்தருளி பரிவேட்டையாக கண்ணாபுரம் கிராமத்திற்கு சென்றனர். அங்கு, வாண வேடிக்கைகளுடன் ரங்கநாதரை வரவேற்ற கிராமத்தினர், வீடுகள்தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இன்று மாலை ஆண்டாளுக்கு மலர் அர்ச்சனை நடக்கிறது.