பதிவு செய்த நாள்
17
ஜன
2025
11:01
சிதம்பரம்; சிதம்பரம் ஞானப்பிரகாசகுளத்தில் 22ஆண்டுகளுக்கு பிறகு, நடராஜர் கோவில் தரிசன விழா தெப்போற்சவம் நடைபெற்றது. சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாச குளத்தில் நடராஜர் கோவில் தரிசனத்தையொட்டி தெப்போற்சவம் நடத்தப்படுவது வழக்கும். ஆனால் குளம் சேதமடைந்திருந்ததால் கடந்த 22 ஆண்டுகளாக தெப்போற்சவம் நடத்தப்பபடவில்லை. இந்நிலையில், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் கோரிக்கையின் பேரில், ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டு குளத்தின் நடுவில், இருந்த நீராழி மண்டபம் புதியதாக கட்டப்பட்டது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ர தரிசன விழாவில் கடந்த. 12ஆம் தேதி தேரோட்டமும் 13ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆருத்ரா தரிசன விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் , 22 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இரவு நடராஜர் கோவிலில் உள்ள சந்திரசேகரர் சாமியை சிறப்பு அலங்காரம் செய்து நடராஜர் கோயில் பொது தீட்சர்கள் நடராஜர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துட்டு வந்து ஞான பிரகாச குளத்திற்கு 11மணியளவில் வந்தது. தொடர்ந்து அங்கு சந்திரசேகரர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது அதைத் தொடர்ந்து சந்திரசேகர் சுவாமி தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், கமிஷனர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், சிதம்பரம் பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் பொதுமக்கள், நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் உடனிருந்தனர்.