மேல்நல்லாத்துார்; கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துாரில் அமைந்துள்ளது எல்லையம்மன் கோவில். இங்கு காணும் பொங்கல் உற்சவம் நேற்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், மஞ்சு விரட்டு நடந்தது. தொடர்ந்து நேற்று, காலை 11:00 மணியளவில் எல்லையம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின், எல்லையம்மன் சுவாமி மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.