திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2025 12:01
திருப்புல்லாணி; திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ராப்பத்து உற்ஸவம் நேற்றிரவு உடன் நிறைவடைந்தது. டிச., 31 வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல் பத்து உற்ஸவம் துவங்கியது. ஜன., 10 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்ஸவருக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. அன்று இரவு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜன., 11 முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்கு ராப்பத்து உற்ஸவம் நடந்தது. நேற்றுடன் ராப்பத்து உற்ஸவம் நிறைவடைந்தது. பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.