ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரஷ்ய கலைக்குழு வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2025 12:01
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கலைக் குழுவினர் வருகை புரிந்தனர். அவர்களை, அறங்காவலர் குழுத் தலைவர் முரளிக்கிருஷ்ணன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து ரஷ்ய குழுவினர், கோவிலை சுற்றி பார்த்தனர். கோவிலில் வடிவமைக்கப்பட்டிருந்த சிற்பங்களையும், சிலைகளை பார்த்து ரசித்தனர். மேலும் கோவில் சிறப்புகளை, தமிழ் கலாசார பெருமைகளை கேட்டறிந்து வியப்படைந்தனர். சிற்பி பாலசுப்ரமணியம், நேரு கல்வி குழும இயக்குனர் முரளிதரன், இந்திய ரஷ்ய கலாசார நட்புற மையத்தின் தலைவர் தங்கப்பன், தொழில் நிறுவனர் கணேஷ், அறங்காவலர் மஞ்சுளாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.