ராஜஸ்தானில் ஆஜ்மீருக்கு அருகிலுள்ள தலம் புஷ்கர். இங்கு புகழ் மிக்க பிரம்மா கோயில் உள்ளது. பத்ம புராணத்தில் இத்தலத்தின் வரலாறு உள்ளது. பிரம்மா ஒருமுறை பூலோகத்தில் யாகம் ஒன்றை நடத்த வான்வழியாகச் சென்றார். குறிப்பிட்ட இடத்திற்கு மேலே பறக்கும் போது அவரின் கையில் இருந்த தாமரை கீழ் நோக்கி வளைந்து பூமியைத் தொட்டது. அங்கே நீரூற்று ஒன்று உண்டானது. புஷ்பத்தால் (மலர்) உண்டான திருத்தலம் என்பதால் புஷ்கர் எனப் பெயர் பெற்றது. யாகம் நடத்திய பிரம்மாவுக்கு புஷ்கரில் கோயில் கட்டப்பட்டது. அருகிலுள்ள குன்றில் சரஸ்வதியின் கோயில் உள்ளது. குரு பரிகாரத் தலமான இங்கு ராஜஸ்தான் பாணியில்தலைப்பாகையுடன் காட்சி தருகிறார் பிரம்மா. இங்கு வரும் பக்தர்கள் வெள்ளிக் காசுகளைத் தரையில் பதித்துச் செல்கின்றனர். இதன் மூலம் தலையெழுத்தை மாற்றி சுகவாழ்வு தருகிறார்.