Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷம், மாத சிவராத்திரி; சிவ ... வசந்த பஞ்சமி; உயரிய செல்வமான ஞானம் அருளும் சரஸ்வதி தேவி அவதார நாள் வசந்த பஞ்சமி; உயரிய செல்வமான ஞானம் ...
முதல் பக்கம் » துளிகள்
போதாயன அமாவாசை; எதுவும் காரண, காரியம் இல்லாமல் நடப்பதில்லை!
எழுத்தின் அளவு:
போதாயன அமாவாசை; எதுவும் காரண, காரியம் இல்லாமல் நடப்பதில்லை!

பதிவு செய்த நாள்

28 ஜன
2025
10:01

போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி தனியாக சூத்ரம் இயற்றினார். இதுவே ஆபஸ்தம்ப சூத்ரம் எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது. போதாயனரின் கணக்குப்படி, அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி, அன்றைய சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து, துவிதியை துவங்கி, வானில் சந்திரப்பிறையும் தெரியும் எனக் கணக்கிட்டால், அமாவாசையின் முதல்நாளான சதுர்த்தசி அன்றே பிதுர்க்கடனை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆபஸ்தம்பரின் கணக்குப்படி பிதுர்க்கடன் செய்யும் போது அமாவாசை திதி இருக்க வேண்டும் என்பது கருத்து. இதைப் பின்பற்றுபவர்கள் அமாவாசை திதியிருக்கும் அன்றே பிதுர்க்கடன் செய்கிறார்கள்.


மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் மகா யுத்தம் தொடங்கும் முன், துரியோதனன் யுத்தத்தில் வெற்றி கிடைக்க எந்த நாளில் போர் துவங்கினால் தனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தர பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் நிச்சயம் வெற்றி கிட்டும் கூறினான். இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையடைந்து, ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று இனிமேல் என்ன செய்வது? என்று கேட்க ஸ்ரீ கிருஷ்ணரும் "கவலை படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்" என அவருக்கே உரிய புன்னகையுடன் கூறிவிட்டு அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார். அதைக்கண்டு திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர். சூரியனும் சந்திரனும் அடடா ஸ்ரீமன் நாராயனரே தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்? நாமே இவர்களிடம் நேரில் சென்று விவரத்தை சொல்லுவோமே என்று நினைத்து சூரியனும் சந்திரனும் ஸ்ரீ க்ருஷ்ண பகவானிடம் "பகவானே! நாளை அல்லவா அமாவாசை? என்றனர். அதற்கு கிருஷ்ணர் புன்னகைத்து, நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை? இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத் தானே இருக்கிறீர்கள்? கண்ணன் அவ்வாறு கேட்ட மாத்திரத்தில்... அப்போது தான் அவ்விருவருக்கும் கண்ணனின் லீலையே புரிந்தது. இதனால் கால நிலையில் சிறிய மாற்றம் ஏற்றப்பட்டு விட்டது. போதாயன அமாவாசையும் பிறந்தது. சதுர்த்தசியை சண்டையிட (போர் ) ஏற்ற திதியாக கூறப்படுகிறது. மஹாபாரதத்தில் கிருஷ்ணர் தர்பணம் செய்து இந்த சதுர்த்தசியில் போர் துவங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தான் முன்னோர்கள் இந்த திதியில் எந்த ஒரு முகூர்த்தமும் செய்வதில்லை.

 
மேலும் துளிகள் »
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
காஞ்சி மாநகரம், தென் மாநிலங்களில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றா கும். பஞ்சபூததலங்களுள் முதன்மை ... மேலும்
 
temple news
தல புராணம்:  தல புராணம் மரத்தைத் தலம மாக கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெயர் பெற்றது, (ஆம்ரம் மாமரம். ... மேலும்
 
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar