Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல நூறு ஆண்டுகளாக குழிக்குள் உள்ள ... பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் இல்லை: கவர்னர் ரவி பேச்சு பாரதத்தில் சனாதனத்தை மிஞ்சி எதுவும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்; வேதனையில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்; வேதனையில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
11:01

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்களை கோயில் செயல் அலுவலர் ராமதிலகம் தடுத்ததால் பல மணி நேரம் காத்திருந்து வேதனையுடன் தர்ப்பணம் செய்துவிட்டு சென்றனர்.


அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோயில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குமேலாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக மஹாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில்அதிகமானோர் தர்ப்பணம் செய்து வந்தனர். திருச்சுழி, ராமேஸ்வரம் செல்ல முடியாத வயதானவர்கள், ஏழை மக்கள் இங்கு வந்து தர்ப்பணம் செய்வர். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு மக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்தனர். கோயிலின் செயல் அலுவலர் ராமதிலகம் கோயில் அர்ச்சகரிடம் யாரும் தர்ப்பணம் செய்யக்கூடாது என கூறிவிட்டார். தர்ப்பணம் செய்ய வந்தவர்களும் செயல் அலுவலரிடம் அலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் மறுத்துவிட்டார். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாத நிலையில் வேதனையில் இருந்தனர். பல மணி நேரம் கழித்து செயல் அலுவலர் சம்மதத்துடன் கோயிலில் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர். இக்கோயிலில் ஓராண்டாக பணியாற்றி வரும் செயல் அலுவலர் ராமதிலகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கோயிலில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக இருப்பது எனக்கு தெரியாது. புதியதாக தர்ப்பணம் செய்ய வருகிறார்கள் என நினைத்து செய்யக்கூடாது என நான் கூறினேன். என்றார். கோயிலில் தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்கள் கூறியதாவது: நாங்கள் 40 ஆண்டுகளாக இக்கோயிலில் தர்ப்பணம் செய்து வருகிறோம். இப்போதுள்ள செயல் அலுவலர் ராமதிலகம் கோயிலில் தர்ப்பணம் செய்யக்கூடாது என தடுக்கிறார். காலையிலிருந்து கத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar