Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூலோகநாதர் கோவிலில் சொர்ண ... வடலுார் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச  ஜோதி தரிசனம் ஏற்பாடுகள் தீவிரம் வடலுார் சத்திய ஞான சபையில் 154வது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கானக்கில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கானக்கில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
05:01

செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க காப்பு அலங்காரமும் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல் பாடி ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். இதில் லட்சக்கானக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கற்பூர தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். விழுப்புரம் கலெக்டர் பழனி, எஸ்.பி., சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தை அமாவாசை என்பதால் காலை முதல் இரவு வரை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தாமதம்; ஒவ்வொரு அமாவாசையின் போதும் பக்தர்ககளிடம் நகை, மொபைல் போன், மணி பர்ஸ் ஆகியன திருடு போகின்றது. இதை கட்டுப்படுத்த போலீசார் இந்த மாதம் சில மாற்றங்கள் செய்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக கோவில் முதல் சுற்று பிரகாரத்தில் உற்சவர் அம்மனை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் இடத்தில், காவலுக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர். இவர்கள் பக்தர்கள் குவிந்து நிற்காமல் உடனுக்குடன் அங்கிருந்து அனுப்பினர். இதனால் பக்தர்களுக்கு குங்குமம், சாமி கயிறு வழங்க முடியவில்லை எனக் கூறி பூசாரிகள் அம்மனை உஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு செல்ல மாட்டோம் என பிரச்சனை எழுப்பினர். இதையடுத்து உதவி ஆணையர் ஜீவானந்தம் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதையடுத்து வழக்கமாக 11 மணிக்கு ஊஞ்சல் மண்டத்திற்கு கொண்டு வரும் அம்மனை, அரை மணி நேரம் தாமதமாக 11.30 மணிக்கு கொண்டு வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar