Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; ... மாணவர்களுக்காக திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை மாணவர்களுக்காக திருப்பதி வேங்கடேச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுார் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச ஜோதி தரிசனம் ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
வடலுார் சத்திய ஞான சபையில் 154வது தைப்பூச  ஜோதி தரிசனம் ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
05:01

கடலுார்; வடலுார் சத்திய ஞான சபையில், 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எனக்கூறிய ராமலிங்க அடிகள் என்றழைக்கப்பட்ட வள்ளலார், 1867ம் ஆண்டு கடலுார் மாவட்டம், வடலுாரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அருகிலுள்ள சத்திய தருமசாலையில் வள்ளலார் ஏற்றிய அணையா தீபமும், எழுதியருளிய அருட்பெருஞ்ஜோதி அகவலும், எளியவர் பசி போக்கும் அணையா அடுப்பும் உள்ளது. வள்ளலார் பிறந்த மருதுார் இல்லம், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லாம், சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் இல்லம் முக்கிய பகுதிகளாக உள்ளது. வள்ளலார் சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று, ஆறு திரைகளை நீக்கி மாத ஜோதி தரிசனமும், ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஏழு திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஜோதி தரிசன விழாவில் தமிழகம், புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் மற்றும் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்பர். வரும் பிப்.11ம் தேதி, 154வது ஆண்டு ஜோதி தரிசன பெருவிழா நடக்கிறது.


இதை முன்னிட்டு சத்திய ஞான சபையில் வண்ணம் பூசும் பணிகள், மின்விளக்குகள் அமைத்தல், பக்தர்கள் தங்குவதற்கான பகுதியில் மேற்கூரை அமைத்தல், பெருவெளி வளாகம் முழுவதும் இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. அறநிலையத்துறை மற்றும் வடலுார் நகராட்சி சார்பில் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், தடுப்புகள் அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. லட்சகணக்கில் திரளும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு இது இடையூறாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், ஜோதி தரிசன விழாவில் உலகெங்கிலும் இருந்து 10லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விழாவிற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பெருவெளியில் சர்வதேச மையத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தடுப்புகள் அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் இடநெருக்கடியை உருவாக்கும் என்பதால், பக்தர்கள் வந்து செல்ல கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


வள்ளலார் சர்வதேச மையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை; கடலுார் மாவட்டம், வடலுாரில் ரூ.100கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், சத்திய ஞானசபைக்கு இடம் கொடுத்திருந்த பார்வதிபுரம் மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.,வின் ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவைச் சேர்ந்த வினோத் ராகவேந்திரன் வழக்கு தொடர்ந்தார். பெருவெளியில் எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தமிழக அரசு பெருவெளிக்கு அருகில் சர்வதேச ஆய்வு மையம் தொடர்பான மற்ற கட்டுமானப்பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. அதை எதிர்த்து வினோத் ராகவேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வள்ளலார் சர்வதேச மையத்தின் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலையே தொடரவேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: மவுனி அமாவாசையை முன்னிட்டு, மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று ஒரே நாளில் 7.64 கோடிக்கும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை இன்று நடந்தது.அரசு ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; துாத்துக்குடி அருகே அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar