திருப்பதியில் ரத சப்தமி விழா; அதிக எடை கொண்ட சர்வபூபால வாகனம் சோதனை ஓட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2025 06:01
திருப்பதி; ஸ்ரீவாரி ரத சப்தமியில் பயன்படுத்தப்படும் சர்வபூபால வாகனத்தின் வலிமையை சரிபார்க்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை சோதனை ஓட்டத்தை நடத்தினர்.
திருமலையில் வரும் பிப்., 04ம் தேதி மினி பிரம்மோத்ஸவம் எனப்படு்ம் ரத சப்தமிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழாவில் பயன்படுத்தப்படும் சர்வபூபால வாகனத்தின் எடை, உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய இன்று, சர்வ பூபால வாகனத்தை சோதனை ஓட்டமாக கோவில் ஊழியர்கள் நான்கு மாட வீதிகளில் தோளில் சுமந்து சென்றனர். மலையப்ப சுவாமி பயன்படுத்தும் அனைத்து வாகனங்களிலும் சர்வபூபால வாகனம் மிகவும் கனமானது. அதிக எடை கொண்டதாகும். வாகன சேவையின்போது ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தது குறிபிடத்தக்கது.