பதிவு செய்த நாள்
03
பிப்
2025
12:02
தஞ்சை; தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது, இக்கோயிலுள்ள அம்மன் புற்று முன்னால் ஆனதால் அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை, தைலக்காப்பு அபிஷேகம் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது, இந்நிலையில் பல லட்சம் மதிப்பில் கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன. இதனையடுத்து இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 10 ந் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது, இந்நிலையில் இன்று விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, ஸ்ரீ மகா கணபதி ஹோமம், பூர்ணாஹீதி ஆகியவை நடைபெற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது, இதில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.