பதிவு செய்த நாள்
03
பிப்
2025
05:02
முகப்பேர்; முகப்பேர் கிழக்கு, காந்தி தெருவில், 50 ஆண்டுகள் பழமையான அருள்மிகு நவகிரக நாயகி அன்னை கருமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சிலர் கோவில் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கோவிலை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில், சில மாதங்களாக கோவிலில் ஏற்பட்ட குறைபாடுகளால், கோவிலலை ஹிந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. அதன்படி, இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் நேற்று கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, கோவில் வரவு செலவு புத்தகம், சாசோலை, ஐம்பொன் சிலை, கோவில் உண்டியல் மற்றும் மட சாவி உட்பட அனைத்தும், புதிதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் குமரனிடம் ஒப்படைக்கப்பட்டது.