பதிவு செய்த நாள்
03
பிப்
2025
05:02
ஸ்ரீபெரும்புதுார்; வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ராமானுஜர் தானுகந்த திருமேனியாக, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அறங்காவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஏற்கனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மதம் சார்ந்த அறங்காவலராக பார்த்தசாரதி, மத சார்பற்ற அறங்காவலராக ஸ்ரீபெரும்புதுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இருவருக்கும், ஹிந்து அறநிலையத்துறை காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் கார்த்திகேயன், நேற்று பதவி பிராமணம் செய்து வைத்தார். இதில், கோவில் செயல் அலுவலர் ராஜஇளம்பெருவழுதி, கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.