பதிவு செய்த நாள்
04
பிப்
2025
10:02
மதுரை: திிருப்பரங்குன்றத்தில் கடும் கெடுபிடி காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் அவதியடைந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, ஹிந்து முன்னணி சார்பில் இன்று அறப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை கலெக்டர் சங்கீதா பிறப்பித்துள்ளார். இன்று மலைமீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிழமை என்பதால் முருகனை தரிசிக்க எப்போதும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அதன்படி இன்று வந்த பக்தர்கள் கடும் கெடுபிடி காரணமாக சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். மலையைச் சுற்றி, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஜனை பாடி போராட்டம்; திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்ல அனுமதிக்காத போலீசாரை கண்டித்து காரைக்குடியில் இந்து முன்னணி அமைப்பினர் பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சற்று நேரத்தில் விசாரணை; திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை கலெக்டர் பிறப்பித்ததை எதிர்த்து அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுந்தர வடிவேல் என்பவர் தரப்பில் முறையீடு. சற்று நேரத்தில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.