பதிவு செய்த நாள்
04
பிப்
2025
12:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவின் 6ம் நாளான நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர்.
இதையொட்டி வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், ஆவுடை நாயகி, பல்லக்கில் சீவிலி நாயகர், திருஞான சம்பந்தர் 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர். அங்கு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை முடிந்து, புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறினார். தீபாராதனை முடிந்து சுவாமிகள் புறப்பாடாகினர். பிப். 6 தை காரத்திகை விழா, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டம், பிப். 7ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 8:30 மணிக்கு சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்கார லீலை நிகழ்ச்சி நடைபெறும்.