வில்லிவாக்கம்: வில்லிவாக்கத்தில், பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கொடிமரம் சேதமடைந்து இருந்ததால், அதை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதையடுத்து, மழையால் கொடிமரத்தின் செப்பு தகடுகள் சேதமடைந்தன; உள்மரம் நல்ல நிலையில் உள்ளது என, கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது. அத்துடன், பிப்., 3ல், சீரமைக்கும் பணி துவங்கும் என, தெரிவித்திருந்தது. இதன்படி, நேற்று அதிகாலை, ஆகம விதிப்படி பூஜையுடன், கொடிமரத்தை சீரமைக்கும் பணியை, கோவில் நிர்வாகம் துவக்கியது.