பதிவு செய்த நாள்
04
பிப்
2025
01:02
பாரிமுனை; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலில், பிரமோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சென்னை, பாரிமுனை, கந்தகோட்டம் கந்தசாமி கோவில் என வழங்கப்படும், முத்துக்குமார சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ திருவிழா, நேற்று துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று, கொடியேற்றத்துடன் திருவிழா சிறப்பாக துவங்கியது. நாளை, தங்கமுலாம் சிம்ம வாகனத்திலும், திருத்தேரிலும் முத்துக்குமார சுவாமி அருள்பாலிக்கிறார். அதைத்தொடர்ந்து, 5ம் தேதி சூரபத்ம வாகனத்திலும், 6ம் தேதி நாக வாகனத்திலும், 7ம் தேதி தேவேந்திர மயில் வாகனத்திலும், திருத்தேரில் முத்துக்குமார சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, 9ம் தேதி ரத உற்சவத்துடன் திருத்தேர் பவனி நடக்கிறது. 10ம் தேதி இரவு, பரிவேட்டை செல்கிறார் சுவாமி; 11ம் தேதி கயிலாய பர்வதம் சண்முக சுவாமி திருக்கல்யாணம்; 12ம் தேதி கொடியிறக்கம்; 13ம் தேதி முத்தியால்பேட்டை கச்சாலீஸ்வரர் கோவில் தெப்பத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 14ம் தேதி கண்ணாடி பல்லக்கு சேவை; 16ம் தேதி தெய்வயானை திருக்கல்யாணம்; 17ம் தேதி வேடர்பறி உற்சவம்; 18ம் தேதி வள்ளி திருக்கல்யாண நிகழ்வும் நடக்க உள்ளன. பிப்., 21ம் தேதி மகா அபிேஷகமும், அதைத்தொடர்ந்து மார்ச் 5ல், மாசி கிருத்திகையை முன்னிட்டு தங்க ரதம் உற்சவம் நடக்கிறது.