பதிவு செய்த நாள்
04
பிப்
2025
01:02
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி கோவிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சூரிய ஜெயந்தி எனப்படும் ரதசப்தமி விழா தென்திருமலை ஸ்ரீ வாரி கோவிலில் இன்று காலை 4.00 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் துவங்கியது. தொடர்ந்து, தோமாலை, கொலு பஞ்சாங்கம் ஸ்வரணம், சகஸ்ர நாமார்ச்சனை, நிவேதனம், பலி , சாற்றுமுறை, ஆர்த்தியை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சேஷ வாகனம், அன்னப்பட்சி வாகனம், அனுமந்த வாகனத்தில் உலா வந்தார். மாலை கருட சேவை மற்றும் சந்திர பிரபை வாகனம் சேவை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.