பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 11:02
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று கொடி மண்டபத்தில் வள்ளி தேவசேனா முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். பின், காலை 10:50 மணிக்கு மேல் காலை 11:30 மணிக்குள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. இன்று இரவு, புதுச்சேரி சப்பரத்தில் ரதவீதி உலா நடக்கும். பிப்., 14ல், கொடி இறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது.