காளஹஸ்தி சிவன் கோயிலில் சூரிய பகவானுக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 10:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள ருத்ர பாதங்கள் அருகில் வீற்றிருக்கும் சதுர்முக (நான்கு) சூரிய பகவான் சன்னதியில் ரதசப்தமி விழாவை முன்னிட்டு, கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
முன்னதாக சிறப்பு கலசம் ஏற்பாடு செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து சூரிய பகவானுக்கு பால், தயிர் தேன் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் (உற்சவ மூர்த்திகள்) சிறப்பு அலங்காரம் செய்ததைத் தொடர்ந்து மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி அம்மையார்களை கோயிலிலிருந்து, சூரிய பிரபை நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர் . இந்த நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர்கள் வேத பண்டிதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட ஏராளமான தரிசனம் செய்தனர்.