பதிவு செய்த நாள்
05
பிப்
2025
12:02
பொங்கலூர்; பொங்கலூர் சேமலை கவுண்டம்பாளையம் வலுப்பூர் அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், மகா அபிஷேகம், அம்மன் புறப்பாடு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அம்மன் திருவீதி உலா நடந்தது. விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல், 3:00 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை பொங்கலூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் குமார் துவக்கி வைத்தார். பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 5:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தேர் நிலையில் விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், செயல் அலுவலர் சுந்தரி, தக்கார் வளர்மதி, வலுப்பூர் அம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் சிதம்பரம், பெருந்தொழுவு ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.