திருப்பதி ஏழுமலையானை தரிசித்த 20.05 லட்சம் பக்தர்கள்; உண்டியல் காணிக்கை 106.17 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 12:02
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் 20.05 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியலில் 106.17 கோடி காணிக்கையாக செலுத்தினர். கொரோனா தொற்றுக்கு பிறகு உண்டியல் மூலம் 35வது மாதமாக 100 கோடியைத் தாண்டியது. ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாக காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடிக்கு மேல் காணிக்கையாக செலுத்தி வருவது குறிபிடத்தக்கது.