கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2025 05:02
புவனகிரி; புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக தினத்தையொட்டி நேற்று 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை நடந்தது. புவனகிரியில் ஆரிய வைசிய சமாஜியம் சார்பில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷக தின சிறப்பு பூஜை நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை பஜனை மடம் வரசிக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனுக்கு பாலாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து கலச ஸ்தாபன் செய்து, மகாலட்சுமி சகஸ்ர நாம பாராயணம், கணபதி ஹோமம், சகஸ்ர 1008 கமல ேஹாமம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, மூலவருக்கு கலாசாபிேஷகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தி்ல மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஆரிய வைசிய சமாஜ சங்கத் தலைவர் சுந்தரேசன் உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர். பூஜைகளை ரஜினி ஐயர், விக்னேஷ் ஐயர் மற்றும் காஞ்சிபுரம் சாய்ராம் மோகன் கனபாடிகர் செய்தனர்.