புலிப்பாணி சித்தர் ஆசிரம யாகத்தில் பங்கேற்ற ஜப்பானிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2025 09:02
பழநி; பழநி புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி நடந்த யாகத்தில் ஜப்பான் பக்தர்கள் கலந்து கொண்டனர். பழநி வடக்கு கிரி வீதியில் புலிப்பாணி ஆசிரமம் உள்ளது. இன்று நேற்று சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் தலைமையில் உலக நலன் வேண்டி 18 சித்தர்களுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் சித்தர்களின் ஓலைச்சுவடி, நவபாஷாணம், இவற்றிற்கு மலர் வழிபாடு நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத மூலிகை பொருட்களால் யாகம் நடந்தது. யாகத்தில் தமிழர்கள் பாரம்பரிய உடை அணிந்த ஜப்பானிலிருந்து வருகை புரிந்த பக்தர்கள், கோபால், சுப்பிரமணியம் தலைமையில் பங்கேற்று வழிபட்டனர்.