திருத்தணி திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2025 09:02
திருத்தணி; திருத்தணி, காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து, நேற்று காலை, மஹா கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதற்காக கோவில் வளாகத்தில், ஐந்து யாகசாலை 108 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் மற்றும் கலச பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, முதல் கால பூஜை மற்றும் மஹா பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. இன்று, காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும் மாலை 7:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்க உள்ளது. நாளை, காலை 8:30 மணிக்கு கலச ஊர்வலம் மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இரவு உற்சவர் அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.