சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள்; 108 கோவில்களில் ஏகாதச ருத்ர பாராயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2025 11:02
அவிநாசி; பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 108 கோவில்களில் ஏகாதச ருத்ர பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு ஏகாதச ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சேவூர் வாலீஸ்வரர் கோவிலிலும் இரண்டாவது ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர், கோவை, கோபி ஆகிய ஊர்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட சாய் பாபாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை திருப்பூர் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி காந்திநகர் பக்தர்கள் ஏற்பாடு செய்தனர். திருப்பூர் ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனத்தின் மாவட்ட தலைவர், அமைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .