பதிவு செய்த நாள்
10
பிப்
2025
03:02
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா பெருநகர் கிராமத்தில் உள்ள பட்டுவதனாம்பிகை சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், தைப்பூச திருவிழா கடந்த 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் இரவில், உற்சவர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாளில் திருத்தேர் உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. இந்நிலையில், ஒன்பதாம் நாளான இன்று காலை 10:00 மணிக்கு, 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. அதில், பட்டுவதனாம்பிகை, பிரம்மபுரீஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோர் முன் செல்ல, இசை வாத்தியங்கள் முழங்க, 63 நாயன்மார்கள் சிறப்பு அலங்காரத்தில் பின் தொடர்ந்து சென்றனர். தொடர்ந்து, நாளை இரவு பிரம்மபுரீஸ்வரர் பட்டுவதனாம்பிகை தாயாருடன், 25 கிராம தெய்வங்கள் செய்யாற்றில் எழுந்தருளி, மகோன்னத காட்சியளிக்க உள்ளனர்.