பதிவு செய்த நாள்
10
பிப்
2025
03:02
கடலுார்; கடலுார் எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் பக்கீரான் வடலுார் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 100 மூட்டை அரிசி, 25 டன் காய்கறிகள் வழங்கினார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.கே.பி., காய்கறி கடை உரிமையாளர் மற்றும் சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் பக்கீரான். சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக இவர், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் நடக்கும் தைப்பூச விழா அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகள், 100 அரிசி மூட்டைகள், 5 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும் அனுப்ப ஏற்பாடு செய்தார். இதனை ஜவான்பவன் அருகில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவரும், ஜி.ஆர்.கே., குழும நிர்வாக இயக்குநருமான துரைராஜ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் பழனிவேல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் சதீஷ், டாக்டர் சதீஷ்குமார், யுவராஜ உட்பட பலர் பங்கேற்றனர்.