திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா; சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 01:02
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு வள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் தை பூசத்தை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து. வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்க்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மூலவர் சுப்பிரமணியருக்கு மகாஅபிஷேகம், வெள்ளி கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.