பதிவு செய்த நாள்
11
பிப்
2025
03:02
பழநி; தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன் கோவிலில் காலை 4.30 மணி முதல் பகல் 12 மணி வரை 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பழநி தைப்பூச திருவிழா விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். பழநிக்கு தைப்பூச பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், சேலம், கரூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைசேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். காரைக்குடி நகரத்தார், நாட்டர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தியும், காவடிகள் சுமந்தும், பால் குடங்களுடனும் வந்தனர். பழநி சண்முகநதியில் ஏராளமான பக்தர்கள் நீராடி காவடி களுடன் ஆட்டம் பாட்டத்துடன் பழநிகோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநி,-திண்டுக்கல், உடுமலை ரோட்டில் பக்தர்கள் பலர் பாதயாத்திரை பழநி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை தரிசனம் செய்த பக்தர்களில் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது.